×

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக சைக்கிள் பிரசார பயணம்: தொண்டருக்கு சேலத்தில் வரவேற்பு

சேலம்:திமுக கூட்டணியை ஆதரித்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் தொண்டருக்கு, சேலத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி (55). தீவிர திமுக தொண்டரான இவர், கடந்த 2004ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியை ஆதரித்து, தமிழகம் முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க வலியுறுத்தி, கடந்த 23ம் தேதி அம்மையார்குப்பத்தில் சைக்கிள் பயணத்தை தொடங்கினார். இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.பல்வேறு மாவட்டங்களில் திமுக கூட்டணியை ஆதரித்து, நோட்டீஸ் விநியோகம் செய்த அவர், நேற்று சேலம் வந்தார். அவருக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, திமுக மாணவரணி மாநில துணை செயலாளர் தமிழரசன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


Tags : Cycle campaign ,alliance ,DMK ,Tamil Nadu ,Salem ,Volunteer , Bicycle, propaganda, travel
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி