×

ஹூனான் மார்க்கெட்டில் ஐநா குழு ஆய்வு

வுகான்: கொரோனா வின் பிறப்பிடமாக கருதப் படும் ஹூனான் கடல் உணவு சந்தையில் நேற்று உலக சுகாதார நிறுவன குழு ஆய்வு மேற்கொண்டது. கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி ஆய்வு செய்ய உலக சுகாதார நிபுணர்கள் குழு சீனா சென்றுள்ளது. வுகானிலுள்ள மருத்துவமனைகள், உணவு சந்தைகள், வைராலஜி இன்ஸ்டிட்யூட் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள இக்குழு திட்டமிட்டுள்ளது. இதன்படி மருத்துவமனைகளில் நேற்று முன் தினம் ஆய்வு மேற்கொண்டது. சனிக்கிழமையன்று அங்குள்ள கண்காட்சியகத்திலும் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து வெட் மார்க்கெட் என்று சொல்லப்படுகிற ஹூனான் கடல் உணவு சந்தையில் நேற்று நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது. உலகின் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்பதால் இங்கு முக்கிய தகவல்கள் கிடை க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வன விலங்குகளை வேட்டையாடுகிறவர்களிடமிருந்து ஹூனான் உணவு சந்தைக்குள் கொரோனா நுழைந்திருக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : UN ,Hunan , UN panel study on Hunan market
× RELATED பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட...