×

27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

சென்னை: வடகிழக்கு பருவமழை இயல்பை காட்டிலும் கூடுதலாக பதிவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.   நடப்பாண்டில் சென்னையில் மட்டும் 1040 மி.மீட்டரும்,  மாநிலத்தில் சராசரியாக 477 மி.மீ மழை பதிவாகியுள்ளது.   மாநிலம் முழுவதும் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.   நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகம் முழுவதும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

Tags : Groundwater level rise ,districts , Groundwater level rise in 27 districts
× RELATED தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்