அந்தியூர்: ஈரோடு மாவட்டம் கோபி நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சுமதி. இவரது மகன் அருண் பாலாஜி. இவர்களுக்கு சொந்தமாக அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி பெஜலட்டியில் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியை சேலத்தைச் சேர்ந்த முருகேசன் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். தொடர்ந்து கல்குவாரி இயக்க அனுமதி கிடைக்காததால் அங்கிருந்த வாகனங்கள் மற்றும் தேவையான பொருட்களை எடுத்துச் சென்றவர், மீதி இருந்த வெடிபொருட்களை அங்கிருந்த ஒரு அறையில் வைத்திருந்தார்.
கடந்த 12 ஆண்டுகளாக இந்த கல்குவாரி இயங்காமல் உள்ளதால் கல்குவாரியில் வெடிபொருட்கள் இருப்பதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தியூர் தாசில்தார் மாரிமுத்து மற்றும் வருவாய் துறையினர் சோதனை செய்தபோது 1000 ஜெலட்டின் குச்சிகள், பாறைகளை உடைக்க பயன்படுத்தும் தோட்டாக்கள் 1282, கரி மருந்து 450 கிலோ, 300 கேப், வாட்டர் ப்ரூப் திரி, 15 காயில் ஒயர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவை அனைத்து பறிமுதல் செய்யப்பட்டது.