விடுமுறையை முன்னிட்டு குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்

பொள்ளாச்சி : விடுமுறையை முன்னிட்டு பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவியில் நேற்று குவிந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.    பொள்ளாச்சியை அடுத்த அழியார் அருகே வனத்துறை கட்டுபாட்டில் உள்ள குரங்கு அருவியில் தண்ணீர் ரம்மியமாக கொட்டுவதால் கடந்த சில வாரமாக சுற்றுலா பணிகள் வருகை அதிகரித்துள்ளது.

 இந்த நிலையில் வார விடுமுறையையொட்டி நேற்று மற்றும் நேற்றுமுன்தினம் குரங்கு அருவிக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.  அதிலும், வெளியூர் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இதனால்,  அங்கு வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டடனர், நேரம் செல்ல செல்ல சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் அருவியில் நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க சுற்றுலா பணிகள் குளிக்க பகுதி, பகுதியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.  தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் பலரும் வெகுநேரம் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

சிறுவர்கள் பலரும், அருவியின் ஒரு பகுதியில் தேங்கிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.  நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர். வரும் நாட்களில் குடியரசு தின விடுமுறை மற்றும்  தைப்பூச விடுமுறையையொட்டி,  சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், அடர்ந்த வனத்திற்குள் விதிமீறி செல்வதை தடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: