காஞ்சி, செங்கை மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021ம் ஆண்டுக்கான  இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று காலை காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.  பட்டியலை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட, வருவாய் அலுவலர் (பொ) நாராயணன் பெற்றுக்கொண்டார். மாவட்டத்தில் 13,15,329 வாக்காளர்கள் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,41,462 ஆண்கள், 6,73,685 பெண்கள், திருநங்கைகள் 182 பேர்  என மொத்தம் 13,15,329 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த நவ.16ம் தேதி வெளியான வாக்காளர் பட்டியலில் 6, 22 081 ஆண்கள், 6,51, 461 பெண்கள், திருநங்கைகள் 174 பேர்  என மொத்தம் 12,73,716 வாக்காளர்கள் இருந்தனர்.

கடந்த நவ.16 டிச.15ம் தேதிவரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் மனுக்கள் பெறப்பட்டன. மேலும் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது. இதில் புதிதாக 19,391 ஆண், 22,224 பெண்கள், 8 திருநங்கைகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 41, 623 வாக்காளர்கள் இணைந்துள்ளனர். இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் ஆர்டிஓ  வித்யா, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் ) பாலமுருகன், திமுக மாவட்ட அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், வக்கீல் கார்த்திகேயன், நகர துணை செயலாளர் ஜெகநாதன், அதிமுக நிர்வாகி ரங்கநாதன், காங்கிரஸ் நாதன், அன்பு, சிபிஎம் சங்கர், வாசுதேவன், நேரு, தேமுதிக ஏகாம்பரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு  மாவட்டத்தில் இறுதி  வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட, கலெக்டரின் நேர்மு உதவியாளர் லலிதா பெற்று கொண்டார்.  13,01,999 ஆண்கள், 13,19,702 பெண்கள், திருநங்கைகள் 325 பேர் என மொத்த 26,22,026 வாக்காளர்கள் உள்ளனர். இதில் திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏக்கள்வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த்ரமேஷ், இதயவர்மன், நகர செயலாளர்கள்,  அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், நகர செயலாளர் ஆர்.செந்தில்குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆர் சுந்தரமூர்த்தி, நகர தலைவர் பாஸ்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சங்கர் தேமுதிக எத்திராஜ், ரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>