×

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுவிப்பு: கால் உடைப்பு, விரல் வெட்டியதாக கண்ணீர் பேட்டி

சென்னை: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை  கடற்படையினர் டிசம்பர் 16 மற்றும் 19 தேதிகளில்  மீனவர்களை  படகுகளுடன் பிடித்து இலங்கை சிறைகளில் அடைத்தனர். இதையடுத்து இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,  இலங்கை சென்று அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்நிலையில் நீதிமன்றம் 40 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தமிழக மீனவர்களை விமானத்தில் சென்னைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.

அதன்பின்பு மீனவர்கள் 40 பேரும் இலங்கையிலிருந்து ஏர்இந்தியா சிறப்பு பயணிகள் விமானத்தில் நேற்று மதியம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மீனவர்கள் கூறியதாவது; நாங்கள் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படை அத்துமீறி நுழைந்து, எங்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்தனர். மேலும் எங்களை அடித்து உதைத்து துன்புறுத்தினர். சிலரின் கால்களை உடைத்தனர். விரல்களை கத்தியால் வெட்டினர் என்றனர்.

Tags : fishermen ,prison ,Tamil Nadu ,interview ,Sri Lanka , Sri Lankan and Tamil Nadu fishermen released
× RELATED இலங்கை சிறையிலிருந்து...