யார் தாதா என்ற போட்டி, கள்ளக்காதல் தகராறில் 2 வாலிபர்கள் வெட்டி கொலை: சிறுவன் உட்பட 5 பேர் கைது

அண்ணாநகர்: அண்ணாநகரில் யார் தாதா என்ற போட்டியிலும்,செங்குன்றத்தில் கள்ளக்காதல் தகராறிலும்  2 வாலிபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர். அண்ணாநகர் மேற்கு பாடி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் பிரகதீஷ் (27). இவர் கடந்த 12ம் தேதி இரவு 10 மணி அளவில் ஜெ.ஜெ.நகர் ரத்தினவேல் பாண்டியன் சாலை வழியாக நடந்து சென்றபோது, ஆட்டோவில் வந்த 5 பேர், பிரகதீஷை வழிமடக்கி சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பினர்.  படுகாயமடைந்த பிரகதீஷ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். தகவலறிந்து வந்த ஜெ.ஜெ.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பிரகதீஷை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, கடந்த 13ம் தேதி மதியம் சிகிச்சை பலனின்றி பிரகதீஷ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், அண்ணாநகரை சேர்ந்த ராஜ்குமார் (எ) மதன் (23), ஆனந்த் (20), சந்தோஷ் (21) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் பிரகதீஷை வெட்டிக் கொன்றது தெரிய வந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஏரியாவில் யார் தாதா என்ற போட்டி நீண்டகாலமாக இவர்களுக்கிடையே நடந்து வந்ததும், அதன் காரணமாக, பிரகதீஷை வெட்டி கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில், சிறுவர் 2 பேரும் செங்கல்பட்டு சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். மற்ற 3 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். புழல்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணா (23), ராகுல் (26). ராகுலின் மனைவி பூஜா (21). இவர்கள் செங்குன்றம் அருகே பெரியார் நகரில் உள்ள ஒரு அரிசி ஆலையில் தங்கி, வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், ராகுலின் மனைவியுடன் கிருஷ்ணாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த ராகுல் தனது மனைவி மற்றும் கிருஷ்ணாவை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்கள் கள்ளக்காதல் தொடர்ந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன், போதையில் ராகுல் மற்றும் கிருஷ்ணா இடையே இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராகுல், மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார்.  படுகாயமடைந்த கிருஷ்ணாவை சக ஊழியர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கிருஷ்ணா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவான ராகுலை தேடி வருகின்றனர்.

Related Stories:

>