×

போகி பண்டிகை!: சென்னையில் நிலவும் கடும் பனி மூட்டம், புகை மூட்டத்தால் 12 விமானங்கள் தாமதம்..!!

சென்னை: சென்னையில் பனி மூட்டம் மற்றும் புகை மூட்டத்தால் 12 விமானங்கள் தாமதமாகியுள்ளது. தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள பழைய துணிகள் உட்பட பல பொருட்களை தீயிட்டு வருகின்றனர். போகி பண்டிகையின் போது விமான நிலையத்தை ஒட்டிய பகுதியில் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என ஏற்கனவே மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்திருந்த போதும் தொடர்ந்து இன்று காலை முதலே மக்கள் பழைய பொருட்களை எரித்து வருவதால் சென்னையின் புறநகர் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் சென்னையில் பனி மூட்டம் மற்றும் புகை மூட்டம் காரணமாக 12 விமானங்கள் தாமதமாகியுள்ளது. பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வரும் விமானம் 20 நிமிடங்கள் வரை தாமதமாகியுள்ளது. இதையடுத்து விமான தாமதத்தால் பயணிகள் பாதிக்கபடாவண்ணம் விமானங்கள் ரத்து செய்யப்படாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

Tags : Boogie Festival ,flights ,Chennai , Boogie, Chennai, smog, flight, delay
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...