×

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்து விவசாயிகள் போகிப் பண்டிகை கொண்டாட்டம்!!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்திற்கு முந்திய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படும். போகியன்று பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தும் நிகழ்வுகள் நடைபெறும். அந்த வகையில் இன்று அதிகாலை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பொருட்களை எரித்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் கடந்த 50 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் வேளாண் சட்ட நகலை எரித்து போகி பண்டிகை கொண்டாடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கும்மிடிப்பூண்டியில் பழைய பொருட்களுடன் மத்திய அரசின் வேளாண் சட்ட நகலும் சேர்த்து எரிக்கப்பட்டது.பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களிலும் வேளாண் சட்ட நகல்களை தீயில் போட்டு கொளுத்தப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போகி பண்டிகையை கொண்டாடினர். வாலாஜாபாத் உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் சட்ட நகல்களை எரித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Farmers' Boki ,festival celebration ,Central Government ,Tamil Nadu , Boki festival, copy of agricultural law, burn, farmers, struggle
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...