வேளச்சேரியில் வனத்துறை தலைமையகம்

சென்னை: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்ட அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழக சட்டசபையில் 110ம் விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேளச்சேரியில் வனத்துறை தலைமையக கட்டிடம் கட்டுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் அரசுக்கு முதன்மை தலைமை வன பாதுகாவலர் கடிதங்கள் எழுதியிருந்தார்.

அவற்றில், பணிகளை இறுதி செய்வதற்காக மேலும் ₹9 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அவரது கோரிக்கையை அரசு பரிசீலித்து முதல்கட்டமாக ₹9 கோடியை ஒதுக்க முடிவெடுத்துள்ளது. மீதமுள்ள ₹30 லட்சம் தொகையை 2020-21ம் நிதியாண்டில் பணிகளின் நிலை மற்றும் தேவை அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>