×

எரிவாயு குழாய் திட்டம்!: தமிழகத்தின் கள்ளக்குறிச்சி, புதுச்சேரியில் நிலம் கையகப்படுத்த அறிவிப்பாணை வெளியீடு..!!

சென்னை: எரிவாயு குழாய் திட்டத்திற்காக தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியிலும் நிலம் கையகப்படுத்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான ஆட்சேபங்களை 21 நாட்களுக்குள் மக்கள் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை எண்ணூர், திருவள்ளூர், பெங்களூரு, புதுச்சேரி, நாகப்பட்டினம், மதுரை ஆகிய முக்கியமான இடங்களின் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் என்பது சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக 1,400 கிலோ மீட்டருக்கும் மேலான சுற்றளவில் நிலங்கள் என்பது கையகப்படுத்துவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எரிவாயு குழாய் திட்டத்திற்காக தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியிலும் நிலம் கையகப்படுத்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கூந்தலூர், ஆசனூர் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அறிவித்துள்ளது. இதற்கான சர்வே நம்பர், சப் டிவிஷன் என அனைத்தும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் எரிவாயு குழாய் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். ஆதலால் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக 21 நாட்களுக்குள் மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. தேர்தல் நேரம் என்பதால் எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் சற்று தொய்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Puducherry ,Kallakurichi ,Tamil Nadu , Gas pipeline, forgery, Pondicherry, land, notice
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...