×

தஞ்சையில் ஆபத்தான நிலையில் தொங்கும் வழிகாட்டி பலகை-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சை : தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் ஆபத்தான நிலையில் தொங்கும் வழிகாட்டி பலகையை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் திருவாரூர், வேளாங்கன்னி, பட்டுக்கோட்டை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் செல்லும் பிரிவு சாலை உள்ளது. இச்சாலை வழியாக தினந்தோறும், காரைக்கால், நாகை பகுதியிலிருந்து நிலக்கரி மற்றும் கடல் மீன்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக ரக மற்றும் கனரக வாகனங்களும் சென்று வருகிறது.

இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், கடந்த சில வருடங்களுக்கு முன் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. வெளியூலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக வருவதால், பிரிவு சாலையில் குழப்பம் ஏற்படாமலிருக்க நெடுஞ்சாலை துறை சார்பில், சுமார் 25 அடிக்கு மேல் ராட்ஷச தூண் அமைத்து வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டது. அதனை வைத்து வாகன ஒட்டிகள் தாங்கள் செல்லும் ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் உள்ள இரும்பினாலான வழிகாட்டி பலகை போதுமான பராமரிப்பு இல்லாததாலும், தரமான இரும்பினால் அமைக்காததால், இரும்பு பலகையில் துரு பிடித்து ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டிருக்கின்றது. மேலும், இரும்பு பலகையை இணைக்கும் மூன்று பகுதியில் ஒரு பகுதி விட்டுள்ளது. இரண்டு பகுதியில் எப்போது விலகுமோ என்ற நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பெயர் பலகை எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் தொங்கி கொண்டிருக்கின்றது.

எனவே, மாவட்ட நிர்வாகம், தொல்காப்பியர்சதுக்கம் பகுதியில் துருபிடித்து எப்போது விழுமோ என ஆபத்தான நிலையில் வழிகாட்டி பலகையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும், பல ஆண்டுகளுக்கு முன்புள்ள அனைத்து வழிகாட்டி பலகையை தரமாக உள்ளதா என ஆய்வு செய்து மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : guide board-action ,Tanjore , Tanjore: Public demand to remove dangerous signboard hanging in Tanjore Tolkappiyar Square area
× RELATED சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில்...