×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்!: வானிலை மையம்..!!

சென்னை: ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது. கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.

இன்றும், நாளையும், கனமழை முதல் மிககனமழை தென் தமிழகத்தில் பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய   கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் கனமழையும்,  கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் லேசான மழை வரக்கூடும். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி மாதத்தில் தொடர் மழை காணப்படுகிறது. தமிழக்தில் கிட்டத்தட்ட 800 சதவீதம் இயல்பான மழை அளவை விட அதிகப்படியான மழை பொழிந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.


Tags : districts ,sky ,Chennai , 4 District, Heavy Rain, Chennai, Cloudy, Weather Center
× RELATED வானகரம் அப்போலோ மருத்துவமனையில்...