முதல்வர், சபாநாயகர் பதவி விலகக்கோரி கேரள சட்டசபையில்எதிர்க்கட்சிகள் அமளி

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன், சபாநாயகர் ஸ்ரீராம கிருஷ்ணனை பதவி விலக வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் நேற்று அமளி நடந்தது. கேரள  சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது. கவர்னர் ஆரீப் முகமதுகான் தனது  உரையை படிக்க தொடங்கியபோது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்,  முதல்வர் பினராய் விஜயன், சபாநாயகர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பதவி விலக  வேண்டும் என்று கோஷமிட்டனர்.  இந்த அமளியால்,  உரையை  தொடர்ந்து படிக்க முடியாமல் கவர்னர் நிறுத்தினார்.ீபின்னர்,  ‘நீங்கள்  தேவையான அளவுக்கு கோஷங்களை எழுப்பி விட்டீர்கள். என்னுடைய கடமையை  நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து,  எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். கவர்னர்  தனது உரையை தொடர்ந்தார். வெளிநடப்பு செய்தவர்கள், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா தலைமையில் சட்டசபை வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.முன்னதாக, பாஜ இளைஞரணி தொண்டர்கள், சட்டசபைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர்.

Related Stories:

>