×

யானை வழித்தட ஆக்கிரமிப்பு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மலை பகுதி பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள 200 செங்கல் சூளைகளை மூடக்கோரி சின்ன தடாகத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும், யானைகள் நல ஆர்வலருமான முரளிதரனும் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்கள் தங்கள் மனுக்களில், கோவை மாவட்டத்தில் உள்ள சின்ன தடாகம், நஞ்சுண்டபுரம்  கிராமங்களில் உள்ள செங்கற் சூளைகளால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், நில வளத்திற்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், செங்கல் சூளைகளையும் அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், இதுகுறித்த அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்யும்படி தலைமை வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : ICC ,Government of Tamil Nadu , Occupancy, Government of Tamil Nadu, iCourt, Order
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...