×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆகம விதிப்படி பூஜைகளை நடத்த வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆகம விதிப்படி பூஜைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் தியாகராஜனிடம், பக்தர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆகம விதிப்படி செய்ய வேண்டிய பூஜைகள் நடப்பது இல்லை. உதாரணமாக சந்திரசேகரர் (பலிநாயகர் ) சுவாமி எழுந்தருளும் நிகழ்வு காலை, மாலை வேளைகளில் நடக்கும். ஆனால், தற்போது, சந்திரசேகரர் (பலிநாயகர்) சுவாமி வராமலேயே பலி பூஜைகள் நடக்கின்றன.

இதுபற்றி, கோயில் மணியத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுபோல், கோயில் ஆகம விதிகளுக்கு எதிராக பலிநாயகர் எழுந்தருளாமல் பலியில் ஈடுபடுவது சிவபக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கோயில் பெருந்தனக்காரர்களும் கண்டுகொள்வது இல்லை. எனவே, ஆகம முறைப்படி பல்லக்கில் சந்திரசேகரர் (பலிநாயகர் ) காலை, மாலை வேளைகளில் எழுந்தருளவும், பூஜை முறைகளை முறையாக கண்காணிக்காத கோயில் பெருந்தனக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Pujas ,Devotees ,Kanchipuram Ekambaranathar Temple ,Agam , Pujas should be conducted at Kanchipuram Ekambaranathar Temple as per Agam rules: Devotees request
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...