×

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம் : இந்திய மீனவர்கள் விடுதலை, இருநாட்டு உறவு குறித்து அதிபர், பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்!!

டெல்லி : இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று இலங்கை செல்கிறார். அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனே அழைப்பின் பேரில் அவர் செல்கிறார். கொழும்பு செல்லும் அவர் அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே, பிரதமர் மகேந்த ராஜபக்ஷே மற்றும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே சந்தித்து இருநாட்டு உறவு மற்றும் இந்திய மீனவர்களின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். கடந்த மாதம் எல்லைத் தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் 40 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்தது. 6 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

இச்சூழலில் இலங்கை செல்லும் ஜெய்ஷங்கர் தமிழக மீனவர்கள் 40 பேரையும் விடுதலை செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்துவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இலங்கை உள்நாட்டு போருக்கு பின்பு தமிழர் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து அவர் ஆய்வு நடத்துவார் என்றும் நம்பப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கை இடையே உறவை வலுப்படுத்தும் வகையில், ஜெய்ஷங்கர் பயணம் அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே 1987-ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட மாகாண கவுன்சில் முறையை ஒழிக்க வேண்டும் என்று இலங்கை அரசின் கூட்டணி கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. அதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஜெய்சங்கர் அங்கு செல்வது முக்கியத்துவம் பெறுகிறது.மேலும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சரக்கு பெட்டக முனையத்தில் இந்தியாவுடன் சேர்ந்து மேற்கொள்ளப்படும் திட்டத்துக்கு துறைமுக வர்த்தக சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த பின்னணியிலும் ஜெய்சங்கர் பயணம் கவனிக்கப்படுகிறது.

Tags : Jaisankar ,talks ,Sri Lanka ,President ,fishermen ,release ,Indian , Union Minister, Jaisankar, Sri Lanka, Travel
× RELATED வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள்...