×

உளியின் ஓசை படத்தின் இயக்குனர் இளவேனில் மாரடைப்பால் மரணம்

சென்னை: கருணாநிதி வசனம் எழுதிய ‘உளியின் ஓசை’ என்ற படத்தை இயக்கியவர் இளவேனில் (73). பிரபல எழுத்தாளரான அவர், ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’, ‘புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
 புதிய நூல் எழுதும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை வடபழநியில் உள்ள ஏ.வி.எம் சுடுகாட்டில் நடக்கிறது. மறைந்த இளவேனிலுக்கு மனைவி பாக்கியலட்சுமி, மகன் சிந்து கார்க்கி, மகள் சுபா உள்ளனர்.



Tags : Uliyin Osai , Uliyin Osai director dies of heart attack in spring
× RELATED பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ...