மதுரையில் இருந்து வங்கதேசத்திற்கு ரயிலில் டிராக்டர்கள் ஏற்றுமதி

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தனியார் நிறுவனம் விவசாயிகளுக்கு பயன்படும் டிராக்டர்களைத் தயாரித்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் டிராக்டர்கள் சாலை வழியாகவும், ரயில் மூலமாகவும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், 25 சரக்கு பெட்டிகளில் 170க்கும் அதிக டிராக்டர்கள் ஏற்றப்பட்டு நேற்று முன்தினம் வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டது. மதுரை கோட்ட ரயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் கணேஷ் கூறும்போது, ‘‘தெற்கு ரயில்வே அளவில் முதல்முறையாக வெளிநாட்டிலுள்ள ரயில் நிலையத்திற்கு, தமிழகத்தில்  தயாரிக்கப்பட்ட டிராக்டர், ரயில் மூலமாக அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது’’ என்றார்.

Related Stories:

>