×

இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன்...! காயம் காரணமாக விலகிய உமேஷ் யாதவுக்கு பதிலாக சேர்ப்பு

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். சிட்னியில் 7-ம் தேதி தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக தமிழக வீரர்  நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு  போட்டியில்  வென்று 1 - 1 என்ற சமயநிலையில் தொடர் உள்ளது.

மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காலில் காயமடைந்தார். இதையடுத்து அவர் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் பந்துவீச வரவில்லை. அவரது காய தன்மை குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். அவர் நாடு திரும்புகிறார். இதையடுத்து அணியில் வேகப்பந்து வீச்சாளரான ‌ஷர்துல் தாகூர், தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே உமேஷ் யாதவுக்கு பதிலாக ‌ஷர்துல் தாகூரை 3-வது டெஸ்டில் விளையாட இந்திய அணி நிர்வாகம் பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில்  உமேஷ் யாதவுக்குப் பதிலாகத் தமிழக வீரர் நடராஜன் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இத்தகவலை பிசிசிஐ அறிவித்துள்ளது. பாக்ஸிங் டே டெஸ்டுக்கு முன்பு ஷமிக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்துள்ள ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். நடராஜன் தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசி வருகிறார் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Natarajan ,Test team ,Umesh Yadav ,Indian , Natarajan in the Indian Test team ...! Addition to replace Umesh Yadav who has been ruled out due to injury
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...