×

மெரினாவில் கடை ஒதுக்கும் விவகாரம்: அரசு, மாநகராட்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நேற்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தெரு வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தல் சட்டப்படி, முறையான கணக்கெடுப்புகளை நடத்தாமல், அடையாள அட்டைகளை வழங்கியுள்ளதாக மாநகராட்சி மீது மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கீட்டுக்கான குலுக்கல் ஜனவரி 6ம் தேதி நடைபெற உள்ளதால், 35 ஆண்டுகளாக மெரினாவில் வியாபாரம் செய்து வரும் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 8 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Tags : government ,Marina: High Court ,corporation , Marina, affair, High Court, order
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...