நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் வன்முறை பாகிஸ்தானில் இந்து கோயில் இடிப்பு

புதுடெல்லி: பாகிஸ்தானில் இந்து கோயிலை முஸ்லிம்கள் இடித்து தள்ளினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ளது கைபர் பக்துன்கவா மாகாணம். இங்குள்ள கராக் மாவட்டத்தில் இருக்கும் தெரி கிராமத்தில் இந்துக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்கள் ஏற்கனவே இங்குள்ள இந்து கோயிலை விரிவாக்கம் செய்து கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இப்பகுதியை சேர்ந்த முஸ்லிம் மதகுருவுக்கு தீவிரவாதிகளின் ஆதரவு உள்ளது. இந்நிலையில், கோயில் கட்டப்படும் இடத்துக்கு நேற்று சென்ற அவர், உள்ளூர் முஸ்லிம் மக்களை தூண்டி விட்டு கலவரத்தில் ஈடுபட ைவத்தார். கடப்பாரை, சம்மட்டிகளுடன் கோயில் அருகே திரண்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள், திடீரென புதிதாக கட்டப்படும் கட்டுமானங்களை மட்டுமின்றி, பழைய கோயிலையும் இடித்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி இந்துக்கள் அதை தடுக்க முடியாமல், அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். கோயில் இடிக்கப்படும் இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories:

>