நகை பறித்த 2 பேர் கைது

புழல்: செங்குன்றம் புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயச்சந்திரன் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி(46). நேற்று முன்தினம் காலை தனது வீட்டின் முன்பு கோலம் போட்டு போட்டு கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த பெண் உட்பட 2 பேர் அவரிடமிருந்து 5 சவரன் தாலி சரடை பறித்துக்கொண்டு, தப்பி சென்றனர். புகாரின்பேரில், செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு சிஎஸ்ஐ பள்ளி தெரு மற்றும் புதுநகர் பாலாஜி கார்டனை  சேர்ந்த ராஜா(41),  கவிதா(40) ஆகியோரை கைது செய்து ஐந்து சவரனை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>