பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து 2 லாரிகள் மூலம் அனைத்து பொருட்களை ஏற்றிச் சென்றார் இசையமைப்பாளர் இளையராஜா

சென்னை: பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜாவுக்கு சொந்தமான 160 பொருட்களை 2 லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டன. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனி அரங்கத்தில் தனது இசைப்பணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது ஸ்டூடியோ அரங்கை பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி இளையராஜா இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

டூடியோவில் ஒருநாள் மட்டும் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தனது பொருட்களை எடுத்து கொள்கிறேன் என்றும் கோர்ட்டில் கூறி இருந்தார். நேற்று பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா பாயன்படுத்தி வந்த அறையை காணவில்லை என்று வழக்கறிஞர் சரவணன் கூறியிருந்தார். பத்மபூஷன் விருது, புகைப்படம் என முக்கிய விருதுகள் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்தன. இளையராஜா பாயன்படுத்தி வந்த பொருட்கள் வேறு அறையில் குப்பைபோல் வைக்கப்பட்டிருந்தன என்று வழக்கறிஞர் சரவணன் நேற்று கூறினார்.

Related Stories:

>