×

உருமாற்றம் பெற்ற கொரோனா பரவுவதால் வெளிநாட்டு பயணிகளுக்கு பரிசோதனை செய்யக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: உருமாற்றம் பெற்ற கொரோனா பரவுவதால் வெளிநாட்டு பயணிகளுக்கு பரிசோதனை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. பிரிட்டன் மட்டுமன்றி அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்ய அரசு தாமதம் காட்டக் கூாடது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனவே உருமாற்றம் பெற்ற கொரோனா பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ள நிலையில் ஒருவருக்கு மட்டும் உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என சுகாதராத்துறை செயலாளர் கூறியிருந்தார். உருமாறிய கொரோனா நபருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளதாகவும் கூறினார்.


Tags : court ,travelers ,spread , Transformation, corona, foreign traveler, experiment, in iCourt
× RELATED ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது...