×

மின்இணைப்பு விண்ணப்பம் ரத்து செய்தால் இ-மெயில், எஸ்எம்எஸ் மூலம் விண்ணப்பித்தவருக்கு தகவல்: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: தமிழக மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:, ‘புதிய சேவை இணைப்புக்கான விண்ணப்ப படிவத்துடன் விண்ணப்பதாரர்களின் புகைப்படம் இருக்க வேண்டும் என வலியுறுத்த தேவையில்லை. மின்இணைப்பு கொடுத்த தேதி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பிரிவு அதிகாரிகள் எல்.டி பில்லிங் மென்பொருளில் மின்னிணைப்பு கொடுக்கப்பட்ட நாளிலேயே பதிவு செய்ய வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விவரங்களை 3 நாட்களுக்கு அப்பால் கணினியில் பதிவு செய்திட முடியாது.

குறைந்தபட்சம் நான்கு மின்இணைப்பு பயன்பாடுகளுக்கான (சேவைகள்) விண்ணப்பம் ‘குழு வீட்டுவசதி வகை’யின் கீழ் வகைப்படுத்தப்படும். 4 முதல் 20 எண்ணிக்கையிலான இணைப்புகளுக்கான விண்ணப்பம் ‘குழு வீட்டுவசதி வகை’யில் உதவி பொறியாளரின் பயனரில் பட்டியலிடப்படும். சிக்கல்கள் இருந்தால், முதல் கட்டணத்தொகையில் இத்தொகையை வரிசைப்படுத்தலாம். சிறு நீட்டிப்பு வகைக்கு 7 நாட்களுக்கு மேல் மற்றும் பெரிய நீட்டிப்பு வகைக்கு 15 நாட்களுக்கு மேல் எந்த நிலையிலும் மதிப்பீடு நிலுவையில் இருக்கக்கூடாது.

விண்ணப்பத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதால், புதிய சேவை இணைப்புக்கான விண்ணப்பம் ரத்து செய்யப்பட வேண்டுமானால், ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளரின் உரிய ஒப்புதலுடனும், விண்ணப்பதாரருக்கு இ-மெயில் / எஸ்எம்எஸ் போன்றவைகளின் மூலம் தெரியப்படுத்த வேண்டும். மேலும் இந்த அறிவுறுத்தல்களை அதிகாரிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இது சம்பந்தமாக ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்படும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’ என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags : applicant , If the e-connection application is canceled, the applicant will be informed by e-mail and SMS: E-Board Notice
× RELATED நடத்தை விதிமீறல் புகார்களில் தேர்தல்...