இன்று பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார் இளையராஜா

சென்னை: சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோவை விட்டு இசை அமைப்பாளர் இளையராஜா வெளியேற வேண்டும் என்று ஸ்டுடியோ நிர்வாகம் அறிவித்தது. இதை தொடர்ந்து இடத்தை காலி செய்வது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே வழக்கு நடந்தது. ஸ்டுடியோவில் தியானம் செய்ய அனுமதி தர வேண்டும் என்று இளையராஜா வழக்கு தொடர்ந்தார். முதலில் இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஸ்டுடியோ தரப்பு, பிறகு ஒப்புதல் அளித்தது. இளையராஜாவுக்கு ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்யவும், தனது உடமைகளை எடுத்துக்கொள்ளவும் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு இளையராஜா தனது வழக்கறிஞருடன் பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார்.

Related Stories:

>