×

இயற்கையின் சீற்றத்தால் ஆறாத வடுவாகிவிட்ட ஆழிப் பேரலைப் பேரழிவின் 16 ஆம் ஆண்டு : மு.க.ஸ்டாலின் பதிவு!!

சென்னை :.இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளில் மறக்க முடியாத ஒன்று சுனாமி. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஆழி பேரலை என்று அழைக்கப்படும் சுனாமி உருவானது. இதில் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. பல உயிர்கள் பலியாகின. தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் பலமாக பாதிக்கப்பட்டன.

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.  நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்றுடன் 16-வது ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் உறவுகளை நினைத்து கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சுனாமி தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இயற்கையின் சீற்றத்தால் ஆறாத வடுவாகிவிட்ட ஆழிப் பேரலைப் பேரழிவின் 16 ஆம் ஆண்டு! 2004 டிசம்பர் 26 #Tsunami-ல் உயிரிழந்தோரை நினைவில் ஏந்துவோம்!  உடைமை இழந்தோரின் உரிமை காப்போம். சீற்றங்கள் குறைந்திடும் வகையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்!, எனத் தெரிவித்துள்ளார்.


Tags : tsunami ,MK Stalin , Nature, Tsunami, MK Stalin, Record
× RELATED தைவான் கிழக்கு கடற்கரையில்...