×

தைவான் கிழக்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

தைவான்: தைவான் கிழக்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவாகியுள்ளது. தைவானின் ஹூவாலியன் நகரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

பலத்த நிலநடுக்கத்தை அடுத்து உயிருக்கு பயந்து மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். கட்டடங்கள், மின்கம்பங்கள் என அனைத்தும் குலுங்கியதால் உச்சக்கட்ட அச்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டதாகவும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தைவான் நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்ட 15 நிமிடத்திற்கு பின் ஜப்பான் யோனகுனி கடலோரத்தில் அலைகள் உயரமாக எழும்பின.

ஜப்பான் கடற்கரையில் 3மீ உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஜப்பான் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டில் 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

 

The post தைவான் கிழக்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Tags : Taiwan ,Tsunami warning ,Taipei ,Tsunami ,Dinakaran ,
× RELATED தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த...