×

மிகப்பெரிய அளவில் இந்தியாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: புவி இயற்பியல் அறிஞர் எச்சரிக்கை

சென்னை: இந்தியாவில் பூமியின் கண்டத்தட்டு ஆண்டுக்கு 5 செமீ அளவுக்கு நகர்வதால், இமயமலைப் பகுதியை ஒட்டிய இடங்களில் நில நடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று தேசிய புவியியற்பியல் ஆய்வு மையத்தின் தலைமை அறிவியல் அறிஞர் எச்சரித்துள்ளார். சமீபத்தில் துருக்கியில் 7.8 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, அங்கு 45 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பாக, மாலத்தீவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஆந்திராவில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து, தேசிய புவியியற்பியல் மையத்தின்(NGRI) தலைமை அறிவியல் அறிஞர் டாக்டர் பூர்ணசந்திர ராவ் தற்போது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ தற்போது ஆசிய கண்டத்தில் ஏற்பட இருக்கும் நிலநடுக்கம் பெரிய அளவில் இருக்கும். பூமியின் அடியில் இணைந்துள்ள பல்வேறு டெக்டோனிக் பிளேட்டுகள், தற்போது தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டு இருக்கின்றன.  அதில், ஒன்றான இந்திய கண்டத்  தட்டு, ஒவ்வொரு ஆண்டும்  5 செமீ அளவுக்கு நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த அழுத்தம் இமயமலைப் பகுதியில் நடக்கிறது. பூமியின் அடிப்பகுதியில் உள்ள பல்வேறு கண்டத் தட்டுகள் தொடர்ச்சியாக  நகர்ந்து கொண்டு இருக்கின்றன. அத்துடன் இணைந்து இந்திய நிலப்பகுதியின் கீழ் உள்ள கண்டத் தட்டும் நகர்வதால் இமய மலைப் பகுதியில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்ரகண்ட் மாநிலம் ஒரு வலுவான இணைப்பின் அடிப்படையில் 18 நில அதிர்வு வரைபட மையங்களை கொண்டுள்ளது. இப்போது குறிப்பிட்டுள்ள மேற்கண்ட பகுதியும் நில அதிர்வு இடைவெளியில் உள்ளது. அதாவது இமாச்சல பிரதேசம் மற்றும் நேபாளின் மேற்கு பகுதிக்கு  இடையில், உத்தரகண்ட்டையும் சேர்ந்து காணப்படுகிறது. இங்குதான் பெரிய, கடுமையான நில நடுக்கங்கள் எந்த நேரத்திலும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இருப்பினும் நாம் 18 நில அதிர்வு வரைபட மையங்களை உத்தரகண்டில் கொண்டுள்ளதால், அது குறித்து கண்காணிக்க முடியும். அதனால், இந்த பகுதியில் பெரிய அளவில் வரும் நிலநடுக்கம் குறித்த தகவல்கள்  உடனடியாக நமது கவனத்துக்கு வரவேண்டியது அவசியம். அதனால், இந்த நிலநடுக்கம் வருவதற்கு முன்னதாகவே நாம் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக எடுக்க வேண்டும். …

The post மிகப்பெரிய அளவில் இந்தியாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: புவி இயற்பியல் அறிஞர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,Chennai ,Earth ,Himalayan region ,
× RELATED மோடி கடவுள் தூதரா என விரைவில்...