×

பிரிட்டனின் பரவி வரும் வீரியம் மிக்க புதிய வகை வைரஸ் இந்தியாவில் ஏற்கனவே பரவத் தொடங்கி இருக்கலாம் : மருத்துவ நிபுணர்கள் கருத்து

மும்பை : பிரிட்டனின் பரவி வரும் வீரியம் மிக்க புதிய வகை வைரஸ் இந்தியாவில் ஏற்கனவே பரவத் தொடங்கி இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் N,S, மற்றும் O.R.F ஆகிய மரபணுக்களில் ஏதாவது 2 மரபணு இருப்பு கண்டறியப்பட்டதால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிரிட்டனில் பரவி வரும் மாற்றம் கொரோனா வைரஸில் S வகை மரபணு இருப்பதில்லை. இதனையடுத்து ஏற்கனவே கொரோனா தொற்றினை உறுதி செய்ய சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் S வகை மரபணு இல்லாத மாதிரிகளை மீண்டும் ஆய்வு செய்து புதிய வகை கொரோனா கிருமியை கண்டறியும் ஆய்வக பரிசோதனைகளில் இந்திய விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மராட்டியம் மாநிலம் மும்பையில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனை ஆய்வு கூடத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். மாதிரிகளில் S வகை மரபணு இல்லாத கிருமிகளை கண்டறிய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு இடங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் சளி மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கிடைக்கும் தகவல்கள் புனேவில் உள்ள தேசிய நுண்ணயிரி ஆய்வகத்துடன் பகிர்ந்துக் கொள்ளப்படும் என்று கஸ்தூரிபாய் மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Britain ,experts ,India , UK, Viral, India, Medical Specialists, Opinion
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...