×

எந்த கட்சியுடனும் மஜதவை இணைக்க மாட்டோம்: மாஜி அமைச்சர் எச்.டி.ரேவண்ணா திட்டவட்டம்

ஹாசன்: முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா உயிருடன் இருக்கும் வரை எந்த கட்சியுடனும் மஜத இணைப்பு இல்லை என்று முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார். ஹாசன் டவுன் பகுதியில் அமைந்துள்ள மக்களவை உறுப்பினர் பிரஜ்வல் வீட்டில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக ரேவண்ணா கூறியதாவது: பா.ஜவுடன் மஜத இணைக்கப்படும் என்று அக்கட்சி மாநில துணை தலைவர் அரவிந்தலிம்பாவளி தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி எந்த திட்டமும் மஜதவில் கிடையாது. அவர் துணை தலைவர் பதவிக்கு தகுதி கிடையாது.  அதே போல் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா உயிருடன் இருக்கும் வரை எந்த கட்சியுடனும் இணைப்பு கிடையாது.

இத்துடன் எந்த கட்சியுடன் உள்ஒப்பந்தமும் கிடையாது. தேசிய கட்சிகள் தவறான கருத்துக்கள் தெரிவித்து வருகிறது. இது நல்லதல்ல.
கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் நேரத்தில் இது போன்ற கருத்துக்கள் தெரிவித்து மஜதவை அழிக்க வேண்டும் என்று பா.ஜ., காங்கிரஸ் தவறான கருத்துக்கள் தெரிவித்து வருகிறதே தவிர வேறு எதுக்கும் கிடையாது. இது போன்ற கருத்துக்களுக்கு மஜத அச்சம் கொள்ளாது. ஜனவரிக்கு பின் மஜத கட்சி என்ன என்பதை காட்டும். மாநிலத்தில் எந்த அரசு அமைந்தாலும் தேவகவுடா குடும்பத்துக்கு தொந்தரவு கொடுப்பது புதியது கிடையாது. விரோத அரசியல் செய்து வரும் பா.ஜவுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் கற்று கொடுப்பார்கள் என்றார்.

Tags : Revanna ,party ,Majatha , Former Minister
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்...