பஜ்ரங்தளம் மீது நடவடிக்கை நாடாளுமன்ற நிலைக்குழுவில் பேஸ்புக் தலைவர் விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை பஜ்ரங் தளம்   தூண்டுவதாக பேஸ்புக்கின் பாதுகாப்பு சார்ந்த குழுவினர் தொடர்ந்து கூறி   வருகின்றனர். ஆனால், இந்த அமைப்பின் பேஸ்புக் கணக்குகள் மீது எந்த   நடவடிக்கையையும் பேஸ்புக் எடுக்கவில்லை. அதன் மீது நடவடிக்கை எடுத்தால்,   இந்தியாவில் தனது ஊழியர்கள், தொழிலுக்கு அச்சுறுத்தல்   ஏற்படலாம் என்பதால், பேஸ்புக் அதை செய்யவில்லை என்று ‘வால் ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டது.

இந்த விவகாரம்   தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவர் அஜித் மோகன், காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தலைமையிலான  தகவல் தொழில்நுட்ப நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவருடன்   பேஸ்புக் பொது கொள்கை இயக்குனர் சிவநாத் துக்ராலும் உடனிருந்தார். அப்போது,‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிக்கையில் வெளியான கட்டுரை குறித்து  காங்கிரஸ்  எம்பி கார்த்தி உள்ளிட்டோர் அவரிடம் குழுவினர் கேள்விகள் கேட்டனர்.

Related Stories:

More