×

சிலரின் தவறால் அனைவருக்கும் பாதிப்பு: அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தகவல்

ஷிவமொக்கா: எப்போதும் இந்து-முஸ்லீம்கள் சகோதரர்கள் போல் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சிலர் செய்யும் தவறால் மாநில மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்தார்.  ஷிவமொக்காவில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அமைச்சர் கே.எஸ். ஈஷ்வரப்பா கூறியதாவது: சில ரவுடி முஸ்லீம்கள் மக்களுக்கு தொந்தரவு கொடுத்து அமைதியை சீர்குலைத்து வருகின்றனர். அது போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் நல்லவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். அனைத்து நேரத்திலும் இந்து-முஸ்லீம்கள் சகோதரர்கள் போல் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சில இஸ்லாமியர்கள் செய்யும் தவறால் மாநில மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.  

நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பஜ்ரங்கதளத்தை சேர்ந்தவரை சில இஸ்லாமியர்கள் வழி மறித்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதற்கு இந்து சமுதாயம் அமைதியாக இருக்குமா என்று கேள்வி எழுப்பினார். ஆக்‌ஷனுக்கு ரியாக்‌ஷன் ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு தேவையான முன் எச்சரிக்கை எடுத்துள்ளது. மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறையினர் சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளனர்.  மாவட்டத்தில் குண்டாகிரி செய்து கொண்டு அமைதிக்கு தீங்கு விளைவித்தால் அமைதியாக இருக்க முடியாது’’ என்றார்.



Tags : Minister , Everyone is affected by the mistakes of some: Minister KS Eeswarappa Information
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி