×

டிரம்ப் நிர்வாகம் தடுத்து நிறுத்திய இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை பைடன் நிர்வாகம் நிறைவேற்றும்!: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடுத்து நிறுத்தி வைத்திருந்த இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தங்களை ஜோ பைடன் நிர்வாகம் நிறைவேற்றும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனை புதிய அதிபராக தேர்வாணைய குழுவினர் இன்று தேர்வு செய்து அறிவிக்கவுள்ளனர். இதனையடுத்து ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக, அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிசை , டைம் நாளிதழ் தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிலுவையில் உள்ள இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தங்களை பைடன் நிறைவேற்றி தருவார் என நம்பிக்கை தெரிவித்தார். வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் முன்னர் தொடர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும், பல்வேறு காரணங்களை கூறி அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழு அதனை இறுதிச் செய்யவில்லை என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பைடன் நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு, தீவிரமான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்னதாக குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தால் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறும் என தெரிவித்துள்ளார்.


Tags : administration ,Biden ,Jaisankar ,India ,Trump , “Trump, India, Trade Agreement, Biden Administration, Foreign Minister Jaisankar
× RELATED கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு...