×

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்.. பாரதியாருக்கு முதல்வர் பழனிசாமி, தமிழிசை புகழாரம்!!

சென்னை : முதல்வர் பழனிசாமி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.மகாகவி பாரதியாரின் 139 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர வேட்கையை மக்கள் நெஞ்சில் விதைத்தவர் பாரதி. பெண் விடுதலையை உரக்க பேசியதுடன், அதை தன் வீட்டிலிருந்தே துவக்கியவரும் இவரே. கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என சமூகத்தில் வலம் வந்த மகாகவி பெண் அடிமை பேசியவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று அன்றே முழங்கிய முண்டாசுக் கவிஞன் பாரதியை அவர்தம் பிறந்தநாளில் வணங்கி போற்றுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் “எங்களைப் போன்ற பெண்களெல்லாம் இன்று முன்னுரிமை பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு அன்று மகாகவி பாரதியார் பாடிய பெண்ணுரிமைதான் காரணம்… மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தில் அவர்தம் நினைவை போற்றுவோம்” என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Tags : Palanisamy ,Jagat ,Tamil ,Bharathiyar , Bharathiar, Chief Minister Palanisamy, Tamil Music, Praise
× RELATED தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி...