×

கிருமியை வெல்லும் பூமி!

கி.மு.400-600

நோய்களின் காரணம் கண்டறிந்தோம்!
கிரேக்கத்தின் வரலாற்றாசிரியரும் அறிஞருமான தூசிடைடஸ் கி.மு.நான்காம் நூற்றாண்டில் நோய்கள் ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு தொற்றும் இயல்புடையதாய் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்தார். அதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சுஸ்ருதர் என்ற இந்திய மருத்துவர், மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதாலேயே  நோய்கள் பரவுகின்றன என்பதை தனது சுஸ்ருத சம்ஹிதை என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

கி.பி.1546

கிருமி கோட்பாடு பிறந்தது!
இத்தாலியின் அறிஞரும் கவிஞருமான ஜிரோலமா பிராகஸ்ட்ரோ என்பவர் தொற்றுநோய்கள் பரவ மிகச் சிறிய நுண்ணியிர்களே காரணமாய் இருக்க முடியும். இவையே ஒரு மனிதனிடமிருந்து  இன்னொரு மனிதனுக்குத் தொற்றும் இயல்புடையதாய் இருக்கின்றன என்ற கோட்பாட்டை உருவாக்கினார்.

கி.பி 1807

நுண்ணியிரிகள் கண்டறியப்பட்டன!
இத்தாலிய மருத்துவ விஞ்ஞானி அகஸ்டினோ பஸ்ஸி நுண்ணியிரிகள்தான் மனித உடலில் நோய்களை உருவாக்குகின்றன என்பதைக் கண்டறிந்தார்.

கி.பி.1818

இக்னாஸ் பிலிப் செம்மல்வே
ஆன்டிசெப்டிக் எனப்படும் சீழ் பிடிப்பதற்கு எதிரான சிகிச்சையின் முன்னோடி இவர்தான். ஹங்கேரியில் பிறந்த இவர், ஆன்டிசெப்டிக் சிகிச்சையை உருவாக்கிய பின்னரே நுண்ணுயிரிகளைக்  கட்டுப்படுத்துவதற்கான தன்னம்பிக்கை மனிதர்களுக்கு உருவானது.

கி.பி.1860

தடுப்பூசி வந்தது!
பிரெஞ்சு மருத்துவர் லூயி பாஸ்டர் நோய்களை ஆராய்ந்து, அதன் காரணமான நுண்ணியிரிகளையும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியையும் உருவாக்கினார். நவீன மருத்துவவியலின் வடிவம்  முழுமையாகத் தொடங்கியது. இன்றும் பாஸ்டுரைசேசன் என்ற தொழில்நுட்பத்தின் பிதாமகன் லூயி பாஸ்டர்தான்.

கி.பி. 2000

வந்துக்கொண்டே இருக்கும்!
வென்றுக்கொண்டே இருப்போம்!!
புதிய கிருமிகள் காலம் தோறும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அல்லது இவ்வளவு நூற்றாண்டுகளாக நம்மால் ஆய்வில் கண்டுப்பிடிக்க முடியாத கிருமிகள் அவை. ஒவ்வொரு கிருமி  வரும்போதும் அதற்கு எதிராக உலகம் அறிவியலைப் பயன்படுத்தி போர் புரிந்துக்கொண்டுதான் இருக்கிறது. கொரோனா என்கிற கொடுங்கிருமிக்கு எதிராக வீரமாகப் போராடும் தலைமுறை நாம். நம்  காலத்துக்குப் பிறகும் கிருமிகள் வந்துக்கொண்டேதான் இருக்கும். நாம் வென்றுக்கொண்டேதான் இருப்போம்.

Tags : Earth , Germ, Earth!
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?