×

2,500 பஸ்கள் சென்னையில் இயக்கம்: எம்டிசி தகவல்

சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், பொதுமக்களுக்காக இயக்கப்பட்டு வரும், 2,500க்கும் மேற்பட்ட பேருந்துகள், நேற்று (8.12.2020) காலை முதல் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர் போக்குவரத்துக் கழக, 32 பணிமனைகளைச் சார்ந்த அனைத்துப் பணியாளர்களும் வழக்கம் போல பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கோவிட்-19 நோய்த் தொற்று காலங்களில், 60% பயணிகள் மட்டுமே பேருந்துகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவித்திருந்த உத்தரவினை தளர்த்தி, 100% பயணிகள் பயணத்திட நேற்றைய தினம் தமிழ்நாடு அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அரசின் நிலையான வழிக்காட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணிகள் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

Tags : Chennai , 2,500 buses operating in Chennai: MTC Info
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...