×

நிவர்’ புயல் சேதங்களை பார்வையிட்ட மத்திய குழு இன்று முதல்வருடன் சந்திப்பு: தமிழகத்துக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் 25ம் தேதி நிவர்’ புயல் தாக்கியது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலமும் பெரிய அளவு சேதத்தை சந்தித்தது. நிவர் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட கடந்த 5ம் தேதி மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் தமிழகம் வந்தது.
இதையடுத்து மத்திய குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களை கடந்த நேற்றும், நேற்று முன்தினமும் பார்வையிட்டது. இந்த ஆய்வு பணிகளை முடித்து விட்டு மத்திய குழுவினர் நேற்று இரவு சென்னை திரும்பினர். இன்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய குழுவினர் சந்தித்து பேசுகிறார்கள்.

இந்த சந்திப்பின்போது, நிவர் மற்றும் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்பு நிலவரங்களை மத்திய குழுவிடம் முதல்வர் எடப்பாடி எடுத்துக் கூறுவார். மேலும், தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி விரைவில் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய குழுவிடம் அவர் வைக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பை முடித்து விட்டு மத்திய குழு, இன்று மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்கள். இதையடுத்து ஓரிரு நாளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடத்திய ஆய்வு பணிகள் குறித்த அறிக்கையை மத்திய குழுவினர் உள்துறை அமைச்சகத்திடம் வழங்குவார்கள். அந்த அறிக்கையின்படி மத்திய அரசு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு புயல் நிவாரண நிதியை விடுவிக்கும்.

Tags : Central Committee ,Chief Minister ,Nivar ,Tamil Nadu ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...