×

இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா?....தீவிரவாதிகளை போல் எங்களை நடத்துகின்றனர்... : விவசாயிகள் குற்றச்சாட்டு

திருச்சி, - டெல்லியில் செல்லவிடாமல் தடுக்கும் போலீஸ் தடையை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் வாயில் எலிகளை கவ்வியபடி ஆர்ப்பட்டம் நடத்தினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு  அளித்த பேட்டி: இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளாகிறது. ஆனால் விவசாயிகள் தற்போதுவரை அடிமையாக தான் உள்ளோம். தொடர்ந்து என்னை மற்றும் விவசாயிகளை வெளியில் விட மறுக்கின்றனர். அப்படிபோானாலும் போலீஸ் வேனில் செல்லும்படி போலீசார் கட்டாயப்படுத்துகின்றனர். இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா?.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் கார்ப்பரேட்கள் கை ஓங்கும். அவர்கள் மரபணு மாற்றப்பட்ட விதை கொடுத்து உற்பத்தி செய்ய சொல்லுவார்கள். மரபணு விதைகளால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும். விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை தரமாட்டார்கள். நீதிமன்றத்துக்கு போக முடியாது.விவசாயிகள் பிரச்னைகளை கலெக்டர், ஆர்டிஒ நீக்குவார்கள் என சட்டம் சொல்கிறது. ஏற்கனவே கரும்பு வெட்டி கொடுத்து விவசாயிகளுக்கு பணம் தரவில்லை. டெல்லி செல்லவிடாமல் தடுத்து வீட்டுக்குள் சிறை வைத்துள்ளனர். கடந்த 23ம் தேதி 300 டிக்கெட், 4ம் தேதி 150 டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்து பணம் வீணாகிவிட்டது.

காஷ்மீரில் பரூக்அப்துல்லாவை வீட்டு சிறை வைத்ததுபோல் என்னையும் சிறை வைத்துள்ளார்கள். இதை கண்டித்து ஐகோர்ட் செல்ல உள்ளோம். ஆனால் எங்கள் பின்னால் வருவோம் என போலீசார் கூறுகின்றனர். தீவிரவாதிகளை போல் எங்களை நடத்துகின்றனர். விவசாயிகள் போராடுவது, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் சேர்த்துதான். போலீசார் எங்களை தடுப்பது அடிமையாக இருப்பதை காட்டுகிறது. சுதந்திரமாக எங்களை செயல்பட அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



Tags : extremists , Extremists, farmers, blame
× RELATED கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பலுசிஸ்தான்...