×

வனப் பகுதிகள் பசுமைக்கு திரும்பின; குன்னூர் மலைப்பாதை ஓரங்களில் ஆர்ப்பரிக்கும் புதிய நீர் வீழ்ச்சிகள்: சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பு

குன்னூர்: குன்னூர்- ேமட்டுப்பாளையம் மலை ரயில்பாதை வனப்பகுதி வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் யானை உட்பட வன விலங்குகள் அதிகளவில் நடமாடுகின்றன. மேலும் பசுமையான இயற்கை காட்சிகள் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக மலைப்பாதை ஓரங்களில் ஆர்ப்பரித்து கொட்டும் புதிய நீர் வீழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்து வந்ததால் நீலகிரி வனப் பகுதிகள் அனைத்தும் பசுமைக்கு திரும்பியுள்ளன.

மலைப்பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களில் நீர்வரத்து உயர்ந்ததால் இந்த நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மலை ரயில் இயக்கப்பட்டால் பயனுள்ளதாக அமைந்துள்ளது என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : forest areas ,Coonoor Hills , The forest areas returned to green; New waterfalls cascading along the Coonoor Hills: Tourists enjoy watching
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தில்...