×

மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 450 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சம் இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்காக தான் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் சேரக்கூடிய மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் ஜூன் 6ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒன்றரை லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலமாக நிரம்புகின்றன.

www.tneaonline.org, www.dte.gov.in எனும் இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். ОС, ОВС, BC, BCM, MBC, DNC பிரிவினருக்கு ரூ.500 பதிவு கட்டணம், எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250 பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையங்களிலும் மாணவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...