×

கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தமிழை பயிற்சி மொழியாக அறிவிக்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சருக்கு கலாநிதி வீராசாமி கடிதம்

சென்னை: கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தமிழை பயிற்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் இந்தி - ஆங்கிலம் மட்டுமே பயிற்சி மொழியாகவும், படமொழியாகவும் உள்ளது. மேலும் கேந்திரிய, சிபிஎஸ்இ பள்ளிகளை மட்டும் மத்திய அரசு முன்னிலைபடுத்தி வருகிறது. இது இந்திய அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி கொளகைக்கு எதிராகவுள்ளது. எனவே செம்மொழியான தமிழை இந்தி, ஆங்கிலத்துக்கு இணையாக பயிற்சி மொழியாக அறிவிக்க கோரி கடிதம் எழுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை தமிழ் மொழி கற்பிக்கப்படாது. 6-ம் வகுப்பிலிருந்தும், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய அரசு சட்டம் உருவாக்கி அறிவித்துள்ளது. அவ்வாறு விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க, தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள், வாரத்தில் 2, 3 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் எனவும் விதி உள்ளதாக கூறினார். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்திலேயே தமிழ் வகுப்புகளை நிறுத்திவிட வேண்டும் என்பது போன்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது என கூறினார்.

Tags : Veerasamy ,schools ,Kendriya Vidyalaya ,Minister of Education ,Union , Kendriya Vidyalaya, Schools, Tamil Training Language, Dr. Veerasamy
× RELATED ஆற்காடு வீராசாமி பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து