×

நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோ பதிவு விவகாரம் முன்னாள் நீதிபதி கர்ணன் அதிரடி கைது

* மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
* யூ-டியூபில் வீடியோ பதிவேற்றம் செய்த உதவியாளரும் சிக்கினார்

சென்னை: நீதிபதிகள் குடும்பங்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் குறித்து அவதூறாக வீடியோ பதிவு செய்த விவகாரத்தில், முன்னாள் நீதிபதி கர்ணன் மற்றும் வீடியோக்களை யூ-டியூபில் பதிவேற்றம் செய்த உதவியாளர் தனசேகரன் ஆகிய 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.சென்னை ஆவடி ராம் நகரை சேர்ந்தவர் முன்னாள் நீதிபதி கர்ணன். இவர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மேற்குவங்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இவர்  நீதிபதிகள் குறித்தும், பெண் வழக்கறிஞர்கள் குறித்தும் அவதூறான சில கருத்துக்களுடன் யூ-டியூபில் வீடியோ பதிவு செய்திருந்தார். இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வீடியோ பதிவுடன் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் முன்னாள் நீதிபதி கர்ணன் பேசிய வீடியோ பதிவை ஆய்வு செய்தனர். அப்போது, நீதிபதிகள் குடும்பங்கள் பற்றியும், பெண் வழக்கறிஞர்கள் குறித்து அவதூறாக பேசியது உறுதியானது. அதைதொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் முன்னாள் நீதிபதி கர்ணன் மீது கடந்த மாதம் 27ம் தேதி ஐபிசி 153, 509 ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் 23ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் முன்னாள் நீதிபதி கர்ணன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 30 தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்ததுநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் நீதிபதி கர்ணனை கடந்த 26ம் மற்றும் 28ம் ஆகிய தேதிகளில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் விசாரணை நடத்தினர். பின்னர் முன்னாள் நீதிபதி கர்ணன் மீதான வழக்கு கடந்த 30ம் தேதி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிய ஆதாரங்கள் இருந்தும் ஏன் முன்னாள் நீதிபதி கர்ணனை கைது ெசய்யவில்லை.

எனவே தமிழக காவல் துறை இயக்குநர் திரிபாதி மற்றும் மாநகர காவல் துறை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆவடி ராம் நகரில் ேநற்று பிற்பகல் முன்னாள் நீதிபதி கர்ணன் மற்றும் அவதூறு வீடிக்களை யூ-டியூபில் பதிவேற்றம் செய்த அவரது உதவியாளர் தனசேகரன் ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். கைது ெசய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் மற்றும் வீடியே பதிவு செய்த தனசேகரன் ஆகியோரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து இரவு வரை விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை முடிவில் முன்னாள் நீதிபதி கர்ணன் உட்பட 2 பேரை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து ெசன்றனர். பின்னர், முன்னாள் நீதிபதி கர்ணனை எழும்பூர் 3வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் பஷீர் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, வரும் 16ம் தேதி வரை கர்ணனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, சென்னை சைதாப்பேட்டை கிளை சிறையில் அவர் அடைக்கப்பட்டார். முன்னாள் நீதிபதி கர்ணன் மீது கடந்த மாதம் 27ம் தேதி ஐபிசி 153, 509 ஆகிய இரண்டு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

Tags : Karnan ,judge , Defamation video recording case against judges Former judge Karnan arrested in action
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...