×

குவாரிகளுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை மதிப்பீட்டு சான்று போலி எம்சாண்ட் தயாரித்தால் 2 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்: உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

சென்னை: எம் சாண்ட் வரைவு விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உற்பத்தியாளர்கள் கோரிக்கை ஏற்று மதிப்பீட்டு சான்று 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை விண்ணப்பித்தால் போதும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். போலி எம் சாண்ட் தயாரிப்பதை தடுக்கும் வகையில் எம்சாண்ட் வரைவு விதிகள் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் வரைவு விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளது அங்கீகாரமில்லாத குவாரிகளில் எம்சாண்ட் தயாரிப்பது தெரிய வந்தால் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எடுத்துச்செல்வது தெரிய வந்தால் ரூ.5 லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டு தண்டனையும் விதிக்கப்படும்.

மேலும் போலி எம்சாண்ட் தயாரிக்கும் குவாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் மற்றும் குவாரிகளில் அனுமதி ரத்து செய்யப்படுகிறது.ஒரு வேளை போலி எம் சாண்ட் மணல் மூலம் கட்டப்படும் கட்டிடம் இடிந்து விட்டால் அந்த குவாரிகளுக்கு அனுமதி ரத்து மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் எம்சாண்ட் வாகனங்களில் எடுத்துச் சென்றால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இந்த வரைவு விதிகளில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த குவாரிகளுக்கு சீல் வைப்பது அபராத வட்டி வசூலிப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரமும், சிறை தண்டனை காவல்துறை அதிகாரிகளும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜமோகன், இணை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் கல்யாணசுந்தரம்  மற்றும் எம்சாண்ட் உற்பத்தியாளர்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கனிம வளத்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்து துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் அனுமதி உள்ள குவாரிகளுக்கு மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டாக மற்றும் அனுமதி இல்லாதவர்களுக்கு ஒரு ஆண்டில் இருந்து 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பீட்டு சான்றிதழ் கேட்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்தை  நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது அனுமதி பெற்ற குவாரிகளில் அடிக்கடி ஆய்வு செய்வது என்பது பிரச்னையாக வரும் என்ற உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே ஆய்வு செய்வோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வாகனங்களில் என்று சொல்லும்போது மதிப்பீட்டு சான்று ரசீது கேட்டு வாங்கிச் சென்றால் பிரச்னை வராது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விதிகளில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாக எம்சாண்ட் உற்பத்தியாளர்கள், லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

* போலி எம் சாண்ட் மணல் மூலம் கட்டப்படும் கட்டிடம் இடிந்து விட்டால் அந்த குவாரிகளுக்கு அனுமதி ரத்து மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
* உரிய ஆவணங்கள் இல்லாமல் எம்சாண்ட் வாகனங்களில் எடுத்துச் சென்றால் ரூ.25 ஆயிரம்  அபராதம் விதிக்கப்படும்.

Tags : Emsant , 2 years imprisonment, Rs 5 lakh fine for producing fake Emsant for 5 quarters
× RELATED கல்குவாரிகளை அரசே ஏற்று நடத்தினால்...