×

திருச்சி- ஹவுரா-திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: திருச்சி- ஹவுரா- திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரயில் (02664) பிற்பகல் 1.45 மணிக்கு டிசம்பர் 1ம் தேதியும், ஹவுரா-திருச்சி இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் (02663) டிசம்பர் 3ம் தேதியும்  மாலை 5.35 மணிக்கு திருச்சி, அரியலூர், விழுப்புரம், தாம்பரம், எழும்பூர், நெல்லூர் வழியாக ஹவுரா இடையே இயக்கப்படுகிறது. அதைப்போன்று சென்னை சென்ட்ரல்- கே.எஸ்.ஆர்.பெங்களூர்- சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் (06075) காலை 7.25 மணிக்கும், அதைப்போன்று கே.எஸ்.ஆர் பெங்களூர்- சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் (06076) பிற்பகல் 2.30 மணிக்கு தினமும் இயக்கப்படுகிறது.

மேலும் சென்னை எழும்பூர்- மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயில் (02613) டிசம்பர் 4ம் தேதி காலை 6 மணிக்கும், அதைப்போன்று மதுரை- சென்னை எழும்பூர் இடையே தேஜஸ் சிறப்பு ரயில் (02614) பிற்பகல் 3 மணிக்கும், சென்னை சென்ட்ரல்- சப்ரா இடையே அதிவேக சிறப்பு ரயில் (02669) நவம்பர் 30ம் தேதி மாலை 5.40 மணிக்கும், சப்ரா- சென்னை சென்ட்ரல் இடையே அதிவேக வாராந்திர சிறப்பு ரயில் (02670) இரவு 9 மணிக்கும் இயக்கப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Trichy-Howrah-Trichy ,Southern Railway , Between Trichy-Howrah-Trichy Special Trains Movement: Southern Railway Announcement
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...