×

மாதவரத்தில் அனுமதியின்றி இயங்கிய பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு சீல்

திருவொற்றியூர்: மாதவரம் பொன்னியம்மன்மேடு 200 அடி சாலையில், தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக்  மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இதில், வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது, தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், தமிழக அரசு தொழிற்சாலைகளை அனுமதியின்றி இயக்க தடை  விதித்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவை மீறி இந்த தொழிற்சாலை செயல்பட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த மாதவரம் மண்டலம் உதவி வருவாய் அலுவலர் லட்சுமி நாராயணன் மற்றும் சங்கர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,  அந்த தொழிற்சாலை அனுமதியின்றி செயல்பட்டதோடு,  கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி இயங்கியது தெரியவந்தது.இதையடுத்து, அங்கு பணிபுரிந்த வட மாநில தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு ஆலைக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். …

The post மாதவரத்தில் அனுமதியின்றி இயங்கிய பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Thiruvottiyur ,Madhavaram Ponnyammanmedu ,
× RELATED காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு கடலில்...