×

புயல் கரையை கடக்கும் போது மக்கள் கடற்கரைக்கு செல்ல தடை: போலீஸ் எச்சரிக்கை

சென்னை: நிவர் புயல் கரையை கடக்கும் போது பொதுமக்கள் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் உத்தரவுப்படி எண்ணூர் முதல் செம்மஞ்சேரி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் மாநகர போலீசார் ஒலி பெருக்கி மூலம் புயல் கரையை கடக்கும்போது யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், ஆர்வத்தில் வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அதையும் மீறி யாரேனும் கடற்கரை பகுதிகளில் நடைபயிற்சி மற்றும் கடற்கரையை பார்க்க வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மெரினா கடற்கரையில் நேற்று மாலை பொதுமக்கள் மற்றும் வாலிபர்கள் பலர் அபாயத்தை உணராமல் சுற்றி செல்பி எடுத்தனர். இதை பார்த்த போலீசார் அனைவரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Tags : beach ,storm ,coast , People forbidden to go to the beach when the storm crosses the coast: Police warning
× RELATED தூத்துக்குடி கடற்கரையில் இருந்து...