மயிலாடுதுறை: டெல்டா பகுதிகளில் ஆழ்கடலில் எண்ணெய் கிணறு அமைப்பது பற்றி எனக்குத் தெரியாது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். மயிலாடுதுறையில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் செய்ய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை பாதிக்கும் எந்ததிட்டத்தையும் இப்பகுதியில் அனுமதிக்கமாட்டோம்.